முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடலூரில் சூறைக்காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்!

கடலூரில் சூறைக்காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்!

சேதமடைந்த வாழைமரங்கள்

சேதமடைந்த வாழைமரங்கள்

கடலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமடைந்ததால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

  • Last Updated :

கடலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமடைந்ததால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில். நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.  கடலூர் அருகே மலைப்பகுதி கிராமங்களான எம்.புதூர், ராமாபுரம்,  வழிசோதனைபாளையம், வெள்ளைபாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தனர். வாழை தார் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு ஈடுகொடுக்க முடியாமல்  10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குலையுடன் கூடிய மரங்கள் சாய்ந்த நிலையில் செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மரத்திற்கும் இதுவரையில் 150 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது இந்த சூறாவளி காற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக  வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனோ தாக்கம் காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் சூறாவளி காற்று மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் பணையம்

First published:

Tags: Cuddalore, Rain, Storm