அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கை!

அமைச்சர் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் வேளாண் விற்பனை சார்பில் 5,822 நடமாடும் ஊர்திகள் தயார் செய்து தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 • Last Updated :
 • Share this:
  நடமாடும் அத்திவாசிய பொருட்கள் விற்பனை வாகனங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தமிழகத்தில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இல்லாத  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   மக்களின் தேவைக்காக நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.  தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  கடலூர் மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்க 563 நடமாடும் காய்கறி வாகனங்கள் ஏற்படுத்தப்படுத்தபட்டுள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் நகர மற்றும் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்க வேளாண்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் 563 நடமாடு காய்கறி வானங்களை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கடலூர் நகராட்சி பகுதியில் இருந்து அனுப்பிவைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களை பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் வேளாண் விற்பனை சார்பில் 5,822 நடமாடும் ஊர்திகள் தயார் செய்து தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  நடமாடும் கடைகளில்  அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை  செய்த அமைச்சர்,  ஒரு வார காலம் மக்கள் இந்த முழு ஊரடங்கு கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான்  கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: