தமிழக அரசு சார்பில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.200 வழங்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்ததை தொடர்ந்து தடுப்பூசி முகாமில் மக்கள் குவிந்தனர்.
கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 430051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி தமிழகத்தில் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. காவல் துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..
அந்தவகையில், கடலூர் மாவட்டத்தில் பாதிரிகுப்பம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் துவக்கி வைத்தார். இந்த நிலையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காலையிலிருந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வராத நிலையில் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 200 ரூபாய் தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் குவிந்தனர். 100 நபர்களுக்கு 200 ரூபாய் கொடுத்துவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 200 ரூபாய் தரப்படும் என அறிவிப்பு காரணமாக ஏராளமானோர் சமுதாய கூடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.