கடலூரில் ஒரு தலையாக காதலித்த இளைஞர் திருமணம் செய்யக் கோரி மிரட்டியதால் 16 வயது சிறுமி தற்கொலை

மாதிரிப் படம்

கடலூரில் ஒருதலைக் காதலன் நெருக்கடி கொடுத்ததால் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 • Share this:
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒருதலையாக காதலித்த இளைஞர் திருமணம் செய்து கொள்ள கூறி துன்புறுத்தியதால் 16 வயது சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  கடலூர் மாவட்டம் சின்னப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வெளிவந்த பாண்டியன், மீண்டும் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் விஷம் குடித்து இறந்து போ என கூறி அவர், சிறுமியிடம் விஷம் கொடுத்ததாக தெரிகிறது

  இதனால் விரக்தியடைந்த சிறுமி, கடந்த 2ம் தேதி விஷம் குடித்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Karthick S
  First published: