• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூரில் கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

கடலூரில் கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்கும் விதமாக 59 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 91 மையங்களில் போடப்பட்டு வந்தது. நகரப் பகுதிகளில் இருக்கும் மையங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டு வரும் நிலையில் கிராம பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி மந்தமான நிலையில் இருந்தது. அதாவது ஒரு வேயின் தடுப்பூசி எடுத்தால் அதனை 10 நபர்களுக்கு நான்கு மணி நேரத்திற்குள் போட்டுவிட வேண்டும். ஆனால் கிராமப்பகுதியில் நாளொன்றுக்கு 1 அல்லது இரண்டு பேர் மட்டுமே தடுப்பூசி போடுவதால் அந்த எடுக்கப்பட்ட வேயின் கெட்டுப் போய் விடுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி வீணாவது அதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 101297 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி  91 மையங்களில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 59 மையங்களில் போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
    கிராம ஆரம்ப சுகாதார மையங்களிலலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டாத இடங்களிலலும் இந்த தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... திருச்சி சிறப்பு முகாமில் 18 பேருக்கு கொரோனா.. இப்போதாவது விடுதலை செய்யுங்கள் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

    மீதமுள்ள 32 இடங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடுபவர்கள் வெகுதூரம் சென்று தடுப்பு ஊசி போட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காரணமாகவும் தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: