ஆற்றில் குளித்த திமுக பிரமுகரை இழுத்து சென்ற முதலை.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

உயிரிழந்த கோபால கிருஷ்ணன்

கோபால கிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலை தாக்குதலில் உயிரிழந்தனர். சகோதரர்கள் இருவருமே முதலை தாக்குதலில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
    சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை முதலை இழுத்துச் சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரது சடலம் கைப்பற்றப்பட்டது. ஆற்றில் முதலை தொல்லை அதிகரித்திருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பாதுகாப்பாக குளிக்க தடுப்பு இரும்புவேலிகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலைகள் அதிகளவில் உள்ளது.  இதனால் ஆற்றில் குளிக்க செல்பவர்கள் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதை ஆகியுள்ளது.  முதலை சில நேரங்களில் ஊருக்குள்ளும் புகுந்துவிடுகின்றன. இதனால் அச்சமான சூழ்நிலையிலேயே அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65)  . இவர் திமுகவில் கிளை செயலாளர் பதவி வகித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று தனது வயலில் விவசாய பணியை முடித்துவிட்டு தனது சகோதரர்களான செல்வமணி, பன்னீர்செல்வம் ஆகியோருடன்  சேர்ந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் முதலை அவரை இழுத்துச் சென்றுள்ளது.

    இதனைப் பார்த்த அவரது சகோதரர்கள் செய்வது அறியாது அச்சத்தில் கரையில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்குள் முதலை கோபாலகிருஷ்ணனை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அதனை பார்த்து அச்சத்தில் இருந்த இரண்டு பேரும் உடனடியாக ஆற்றில் இருந்து கரை  ஏரியுள்ளனர். பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: இந்த ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள், ரூ.1000 உரிமைத்தொகை கிடைப்பதில் சிக்கல்?




    அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் கோபால கிருஷ்ணனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இறுதியில் முதலையின் வாயில் இருந்த கோபால கிருஷ்ணனின் சடலத்தை  அவர்கள் மீட்டனர்.  முதலை தாக்கி உயிரிழந்த கொபால கிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.



    சகோதரரையும் கொன்ற முதலை

    கோபால கிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலை தாக்குதலில் உயிரிழந்தனர். சகோதரர்கள் இருவருமே முதலை தாக்குதலில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் செப்.17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!


    இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், விவசாய பணிகள் முடித்து விட்டு இந்த பழைய கொள்ளிடம் ஆற்றில் பல ஆண்டுகளாக குளித்து வருவதாகவும் இது போன்ற சம்பவங்கள்  பலமுறை நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  ஒவ்வொருமுறையும் முதலையிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆற்றுக்குள் தடுப்பு இரும்பு வேலி அமைத்து தர கோரி போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை இதுவரையில் எந்த தடுப்பு வேலியும் அமைத்து தரவில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்  உடனடியாக தடுப்பு இரும்பு வேலி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:பிரசன்ன வெங்கடேசன் -சீர்காழி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: