Home /News /tamil-nadu /

சிதம்பரம் : கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5000 கோழிகுஞ்சுகள் கருகின

சிதம்பரம் : கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5000 கோழிகுஞ்சுகள் கருகின

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5000 கோழிகுஞ்சுகள் கருகின

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5000 கோழிகுஞ்சுகள் கருகின

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகின. 

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ்(40). இவர் இந்த கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கோழிப்பண்ணைக்கு புதிதாக கோழிக்குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. பண்ணையில் கோழிக்குஞ்சுகள் அதிகமாக இருந்ததால் முருகதாஸ் தினமும் இரவு காவல் பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கோழிப்பண்ணையில் காவலுக்கு இருந்த முருகதாஸ் இன்று விடியற்காலையில் டீ குடிப்பதற்காக சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது கோழிப்பண்ணை திடீரென தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. மின்சார கசிவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவில்லை. இந்த திடீர் தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் எரிந்து, கருகி இறந்தது.

மேலும் கோழிப்பண்ணை கொட்டகையில் இருந்த கோழி தீவனம், மின்மோட்டார் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசமானது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 3 லட்சம் ஆகும். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து முருகதாஸ் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : உருவ கேலி செய்தவர்களை ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று பதிலடி கொடுத்த ஒசூர் சிறுமி
Published by:Vijay R
First published:

Tags: Chidambaram

அடுத்த செய்தி