முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலை மத்திய அரசு மூடக்கூடாது: தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை

ராமகிருஷ்ணன் - முந்திரி ஏற்றுமதி சங்க செயலாளர், செல்வமணி -  முந்திரி ஏற்றுமதி சங்க பொருளாளர்

65 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலை மத்திய அரசு மூடுவதற்கு முடிவு-இதனால் உலக அளவில் முந்திரி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு ஏற்படும் இதனை மூடக்கூடாது என்று தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கடலூர் , தஞ்சாவூர் , கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் முந்திரிபருப்பு உற்பத்தி , பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று வருகிறது . உலக அளவிலும், தேசிய அளவிலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. உலக முந்திரி சந்தையில் பண்ருட்டி முதன்மை இடத்திலும், தமிழகத்தின் மிகப் பெரிய முந்திரி சந்தையாகவும் கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது. பண்ருட்டி பகுதியில் 20% ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.

முந்திரி பருப்பை ரகம் பிரித்து, பதப்படுத்த 200 நடுத்தர தொழிற்சாலைகள் 1000 சிறு, குறு தொழிற்சாலைகளும் கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பெண் தொழிலாளர்களும் முந்திரி கொட்டைகளை உடைத்து, பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முந்திரி ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது. முந்திரி ஏற்றுமதியை ஊக்குவிக்க ஒன்றியரசு 1955ம் ஆண்டு முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் அமைத்தது. இந்த கவுன்சில் இந்திய ஏற்றுமதியாளர்களை வெளிநாட்டு இறக்குமதியாளர்களுடன் சந்திக்க வைப்பது. ஆர்டர்கள் பெற்றுத் தருவது.

இந்திய முந்திரிப் பருப்பின் தரம் பற்றி வெளி நாடுகளில் பிரசாரம் செய்வது. வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில் உறுப்பினர்களை கலந்து கொள்ளச் செய்தல் அகிவற்றை செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் பண்ருட்டி, கோவா, கொல்லம், ஐதராபாத், தாசர்கோடு, மங்களூர் என பல ஊர்களில் முந்திரிப் பருப்பு பதப்படுத்தும் பெரிய நிறுவனங்கள் உள்ளன.
இந்த கவுன்சில் 1977ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு சிறந்த லேபரட்டரியை தொடங்கியது.

முந்திரியை சோதனை செய்து தரச்சான்று தர மட்டுமல்ல பலவகை உணவுப் பொருட்களை சோதிக்கவும் பயன்படுகிறது. தரத்தை பரிசோதிக்க பல பயிற்சிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
பலவகை, உணவுப் பொருட்களைப் பற்றி பரிசோதிக்கவும், அதன் தரம் பற்றி படிக்கவும் இந்நிறுவனம் உதவுகிறது. தண்ணீர், மூலிகைகள், மீன், பால் பொருட்கள், தேன், பழம், இறைச்சி, பேக்கரி பொருட்களை பரிசோதிக்கவும், தரச்சான்று வழங்கவும் இந்த பரிசோதனைக் கூடம் உதவுகிறது.

முந்திரி


இந்நிலையில் சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் அடையாளமாக செயல்பட்டு வரும் இந்த கவுன்சிலை மூடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கவுன்சிலை மூடினால் 5000ம் கோடிக்கு மேல் அன்னிய செலவானி ஈட்டு தரும் முந்திரி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கபடும். மேலும் இந்த கவுன்சில் இல்லையென்றால் தரம் குறைந்த முந்திரி கள்ளதனமாக இறக்குமதி ஏற்றுமதி செய்யபடும். இதனால் இந்தியாவில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அரசுக்கும் வருவாய் பாதிக்கபடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... குழந்தை மித்ராவை காப்பாற்ற மேலும் 5 கோடி தேவை.. நிதியுதவிவழங்க முதல்வருக்கு தந்தை வேண்டுகோள்..

ஏற்கனவே ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்த கவுன்சிலை மூடிவிட்டால் முந்திரி ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கிவிடும்.
இதனால் மத்திய அரசு இந்த கவுன்சிலை மூடும் முடிவை உடனே கைவிட வேண்டும் என தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால் இந்த கவுன்சில் மூடாமல் இருந்தால்தான் சாத்தியப்படும் ஏற்கனவே கொரோனாவால்  வாழ்வாதாரம் இழந்து இருக்கும் முந்திரி விவசாயிகளுக்கு இந்த கவுன்சில் மூடும் முடிவு பேரிடியாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published: