வீராணம் ஏரியை வந்தடைந்த காவிரி நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி..

வீராணம் ஏரியை வந்தடைந்த காவிரி நீர்

வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
காவிரி டெல்டாவில் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50  அடி முழு கொள்ளளவு கொண்ட ஏரி மூலம் சுமார் 50,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இதுதவிர சென்னை மக்களின் குடிநீர்தேவையை தீர்ப்பதில் வீராணத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த ஏரிக்கு முக்கிய நீர் ஆதரமாக இருப்பது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர்-தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழணை ஆகும். 9 அடி கொள்ளளவு கொண்ட இந்த கீழணையில் 7 அடியில் நீர்மட்டம் இருக்கும் போது, வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கல்லணையை கடந்து, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடைமடை பகுதியாக இருக்கும் கீழணைக்கு கடந்த  16-ந்தேதி வந்தடைந்தது.

கீழணைக்கு வந்த காவிரிநீர் அணையில் 8.50/9.00 அடியை எட்டியது. இதனையடுத்து அணைக்கு நீர்வரத்து 750 கனஅடியாக இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதியும் மேலும் வீராண ஏரியை நிறப்பும் பொருட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள், கீழணையில் அமைந்துள்ள வடவாறு தலைப்பில் 537 கனஅடி தண்ணீரை வீராணஏரிக்கு திறந்து விட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு காவிரி நீர்  திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ” கீழணைக்கு தண்ணீர் வரத்தின் அதிகரிப்பால் வீராணயை நிரப்புவதற்காக தண்ணீர் திறந்துள்ளோம். அடுத்த 10நாட்களில் வீராணஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. அதன்பிறகு ஏரியை சுற்றியுள்ள 27 பாசன வாய்க்கால்களிலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கும் அரசு விழா நடைபெறும்.
Published by:Vaijayanthi S
First published: