'சாதி சான்றிதழ் வேண்டும்' - கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கோரிக்கை
'சாதி சான்றிதழ் வேண்டும்' - கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கோரிக்கை
'சாதி சான்றிதழ் வேண்டும்' - பள்ளி மாணவர்கள் போராட்டம்
Cuddalore District : அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்காததால் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கணிக்கர்கள் குடும்பத்துடன் குடுகுடுப்பை இசைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சாதி சான்றிதழ் வழங்க கோரி பள்ளி மாணவ மாணவிகளுடன் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் குடுகுடுப்பை இசைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடுகுடுப்பை உடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் 500 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 250 க்கு மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
மாணவ மாணவிகள் 11 வகுப்பு மற்றும் கல்லூரி சேர விரும்புவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாத்தால் மேற்ப்படிப்பு பயிலமுடியாத நிலை ஏற்ப்பட்டு வருகிறது.
இதனால் அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்காததால் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கணிக்கர்கள் குடும்பத்துடன் குடுகுடுப்பை இசைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் போல நாங்கள் இனி குடுகுடுப்பு இசைக்க மாட்டோம், ஜோசியம் பார்க்க செல்லமாட்டோம் நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறோம் உடனியாக அரசு தங்களுக்கான சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என கையில் பதாகைகள் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சார் ஆட்சியர் அதியமான்கவியரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.
செய்தியாளர் : பிரேம் ஆனந்த்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.