Home /News /tamil-nadu /

தாலி சங்கிலியை பறித்துச் சென்ற காத்து கருப்பு? - கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தாலி சங்கிலியை பறித்துச் சென்ற காத்து கருப்பு? - கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Cuddalore : காத்து கருப்பு விரட்டுகிறேன் எனக் கூறி கடலூரில் பெண்ணிடம் தாலி சரடு பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூரில் காத்து, கருப்பை ஓட்டுவதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தாலி சரடை பறித்துக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காந்தி வீதியை சேர்ந்தவர் பாண்டியன். கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி விஜயஸ்ரீ(30). பிற்பகல் மர்ம நபர் ஒருவர் பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் பாண்டியன் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் அவரது மனைவி விஜயஸ்ரீ அழைத்து உள்ளார். அப்போது இரவு நேரத்தில் "காத்து கறுப்பு தாக்கியது போல்" நீங்கள் பயந்து அலறியதாக உங்கள் கணவர் பாண்டியன் என்னிடம் கூறினார். ஆகையால் நான் நேரில் வந்து காத்து கருப்பு விரட்டி சரி செய்கிறேன் என கூறியுள்ளார்.

    அப்போது விஜயஸ்ரீ இது சம்பந்தமாக என் கணவர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை. ஆகையால் நீங்கள் செல்லுங்கள் என கூறி உள்ளார். ஆனால் அந்த நபர் உன் கணவர் பாண்டியன் என்னிடம் தெரிவித்து விட்டு தற்போது தான் வெளியில் சென்றுள்ளார் என கூறியதுடன் குடிக்கத் தண்ணீர் அந்த மர்ம நபர் கேட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டினுள் சென்று சொம்பில் தண்ணீர் எடுத்து வந்துள்ளார். பின்னர் விஜயஶ்ரீயை அமர வைத்து. அவரது முகத்தில் தண்ணீரை அடித்து தலையைச் சுற்றி மூன்று முறை தண்ணீரை கீழே ஊற்றி உள்ள அதன்பிறகு நகையை கழற்றி செம்பில் போட சொல்லி உள்ளார்.  அதற்கு அவர் மறுக்கவே இதை போட்டால்தான் தோஷம் கழியும் என அவர் கூறியுள்ளார்.

    ஆகையால் நீங்கள் உங்கள் கழுத்தில் அணிந்துள்ள தாலி செயினை கழற்றி, சொம்பில் உள்ள தண்ணீரில் போடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் விஜயஸ்ரீ சந்தேகத்துடன் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை கழற்றி சொம்பில் உள்ள தண்ணீரில் போட்டு உள்ளார். பின்னர் காதில் உள்ள கம்மலையும் கழற்றி போட சொல்லிய பின்னர் சுபஸ்ரீ முகத்தில் அந்த தண்ணீரை மர்ம நபர் மீண்டும் தெளித்து விட்டார். பின்னர் உள்ளே சென்று முகத்தை கழுவி விட்டு வெளியில் வருமாறு தெரிவித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து விஜயஸ்ரீ வீட்டுக்குள் சென்று முகத்தைக் கழுவி விட்டு வெளியில் வந்து பார்த்த போது மர்ம நபரை சொம்புடன் காணவில்லை‌.

    Also Read:  2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் - 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

    இதனால் பதற்றமடைந்த விஜயஸ்ரீ சாலை முழுவதும் மர்ம நபர் எங்கேனும் உள்ளாரா என்பதனை பார்த்து உள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Gold, Police, Theft

    அடுத்த செய்தி