மிலிட்டரி கேன்டீனில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்த ராணுவ வீரர்கள்... சீல் வைத்த அதிகாரிகள்

மிலிட்டரி கேண்டீன்

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு ராணுவ வீரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டதால் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  • Share this:
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் மிலிட்டரி கேன்டீன் உள்ளது. இந்த கேன்டீனில் மாதம்தோறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் வாங்கி செல்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் தொற்று நோய் பரவல் இருந்து வரும் காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் 500-க்குk; மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மதுபாட்டில் வாங்க மிலிட்டரி கேன்டீன் முன்பு திரண்டனர்.

Also Read : ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - எதிர்க்கட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

காலையில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் மது பாட்டில் வாங்க  கேண்டீன் முன்பு குவிந்ததால் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த பகுதியில் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு சிலர் முககவசம் அணியாமலும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்தும் விதமாக குவிந்து இருப்பதால் மிலிட்டரி கேன்டீனுக்கு சீல் வைக்கப்படும் என கடலூர் வருவாய்த்துறையினர் போலீசார்  எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில்  முன்னாள் ராணுவத்தினரை நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என கூறியும் கேன்டீனுக்கு வந்த முன்னாள் ராணுவத்தினர் ஒருவர் கூட சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக மதுபாட்டில்களை எப்படியாவது வாங்கிக்கொள்ள வேண்டும் என முண்டியடித்து நின்றனர். இதனால் வருவாய்துறையினர் தொற்று ஏற்படுத்தும் விதமாக அதிக அளவில் குவிந்ததால் கேன்டீனுக்கு சீல் வைத்தனர்.

Also Read :  தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று

சீல் வைக்கப்பட்டதால் ஆவேசமடைந்த முன்னாள் ராணுவத்தினர் அதிகாரிகளிடமும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் பலராமன் பேச்சுவார்ததை நடத்தி டோக்கன் முறை அமுல்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட வரிசையில் நிற்க வைத்து பின்னர் வைக்கப்பட்ட சீலை  நீக்கி ஒவ்வொருவராக மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: