கடலூரில் சமூக இடைவெளியை தவறாக புரிந்து வட்டமாக கூட்டம் - நகைப்புக்கு உள்ளான அ.தி.மு.க போராட்டம்

Youtube Video

கடலூரில் சமூக இடைவெளி என்பதை தவறாக புரிந்துகொண்டு வட்டவடிவில் நின்று அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபட்டதால் நகைச்சுவை ஏற்பட்டது.

 • Share this:
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். கொரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

  அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள தமது இல்லம் எதிரில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

  அ.திமு.க போராட்டம்


  இந்தநிலையில், கடலூரில் அ.தி.மு.கவினர் பங்கேற்ற போராட்டம் சமூகவலைதளங்களில் நகைச்சுவைக்கு உள்ளாகியுள்ளது. அ.தி.மு.க தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு கடலூர் மாட்டுக்குப்பம் பகுதியிலுள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் கோலத்தில் வட்டம் போடப்பட்டிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால், வட்டத்தைக் கவனிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நெருக்கமாக வட்டமாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகவருகிறது. மீம் கிரியேட்டர்கள் மீம் போட்டு இதனை கலாய்த்துவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: