கடலூரில் தொழிற்சாலையில் திருட வந்த கும்பல் - போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சி
கடலூரில் தொழிற்சாலையில் திருட வந்த கும்பல் - போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சி
வெடிக்காமல் இருந்த பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீஸ்
கடலூர், பெரியகுப்பத்தில் 1500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள எண்ணெய் தொழிற்சாலை, தானே புயலின் போது பாதிக்கப்பட்டதால் இயக்கப்படவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அந்த ஆலையிலேயே உள்ளது.
கடலூரில் தொழிற்சாலையில், இரும்புப் பொருட்களை திருட வந்த கும்பல், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர், பெரியகுப்பத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள எண்ணெய் தொழிற்சாலை, தானே புயலின் போது பாதிக்கப்பட்டதால் இயக்கப்படவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அந்த ஆலையிலேயே உள்ளது.
அண்மைகாலமாக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சிலர், ஆலையில் இருக்கும் பொருட்களை திருடிச்சென்றதால், புதுச்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு கொள்ளையடிக்க வந்தவர்கள், தொழிற்சாலையின் ஒரு பக்க சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார், வாகன ஒலி எழுப்பி எச்சரித்துள்ளனர்.
இதனால் அதிர்ந்த கொள்ளையர்கள், மற்றொரு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அது போலீசாருக்கு அருகில் விழுந்து வெடித்துள்ளது. மேலும் ஒரு பெட்ரோல் குண்டை சற்று தூரத்தில் வைத்துவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் வெடிக்காத பெட்ரோல் வெடிகுண்டை கைப்பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.