Home /News /tamil-nadu /

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

மணிகண்டன்

மணிகண்டன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் தெற்கிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன். இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் தெற்கிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன். இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இருவரும் தனியாக சந்தித்த போது அவரை திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


எனவே, சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் பெண் சார்பில் 20-5-2015 அன்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி நிச்சயம் செய்துக் கொண்டனர். அக்டோபர் மாதம் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்த  நிலையில் 6 மாதம் கழித்து திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தட்டிக்கழித்துள்ளார்.


அதன்பின்னர், மணிகண்டன் திருப்பூர் சென்று விட்டதாகவும் அவர் வந்த பின்னர் திருமணம் நடத்திக் கொள்ளலாம் என்று மணிகண்டன் பெற்றோர் கூறி வந்த நிலையில் அவர் அங்கே ஒரு பெண்ணுடன் பழகி திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.


இத்தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் மீண்டும் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன் இன்று தீர்ப்பு கூறினார். அதில், பெண்ணை திருமண ஆசைக்காட்டி கர்ப்பமாக்கியதோடு, குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த மணிகண்டனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Also read... முதன்மை காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை!
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறுகையில், அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில், ரூ.1.40 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி