Black Fungus : கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

கருப்பு பூஞ்சை

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 4 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  • Share this:
    கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கின்றது.

    இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்ட சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

    கடலூர் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் கடந்த 8-ஆம் தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதியானது.

    அவருக்கு மருத்துவர்கள தீவிர சிகிச்சை அளித்த போது சர்க்கரை நோய் அளவு அதிகரித்து அவரது கை, விரல், முகம் கருப்பாக மாறியது. கண் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோல் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (54) என்பவர் கடந்த 10-ஆம் தேதி நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழதார்.

    வேப்பூர் ராமாபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (55) சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து முகம், கை, கால் கருப்பு நிறமாக மாறி, கண் வீக்கம் அதிகரித்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இருப்பினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

    சேத்தியாதோப்பு மீனா (45) சென்னை தனியார் மருந்துவமனையில் சிகிச்சையின் போது கருப்பு பூஞ்சை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தில் 4 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Must Read :  டெல்லியிலிருந்து மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சென்னை வந்தன

     

    கொரோனா, பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கின்றது.
    Published by:Suresh V
    First published: