Home /News /tamil-nadu /

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்... கோட்டாட்சியர் அறிவிப்பு

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்... கோட்டாட்சியர் அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

Chidambaram Natarajar Temple : கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் பொதுமக்கள் நலன் கருதி, சிதம்பரம் நகரில் போடப்பட்ட 144 தடை உத்தரவு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் ரவி அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில்  ஏறி, தேவாரம் பாட சென்ற பெண்ணை கோவில் தீட்சிதர்கள் தாக்கி, ஜாதி குறித்து பேசியதாக பாதிக்கப்பட்ட பெண் சிதம்பரம் நகர காவல்நிலையத்தில்  பரபரப்பு புகார் அளித்தார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட தீட்சிதர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என. சிவனடியார்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக  தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட அரசாணை வெளியிடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இந்நிலையில் ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில். மீண்டும் போராட்டம் துவங்கும்  சூழல் ஏற்பட்டது. இதனிடையே நேற்று  அரசாணை வெளியிட பரிசீலிக்கப்பட்டு சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதால், ஒரு மாதத்திற்கு யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கோட்டாட்சியர் ரவி நேற்று மாலை 144 தடை உத்தரவை அறிவித்திருந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்


Must Read : 15 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இந்நிலையில், நேற்று மாலை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பேரில் பொதுமக்கள் நலன் கருதி தற்போது 144 தடை உத்தரவு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: Chidambaram, Cuddalore, Protest, Temple

அடுத்த செய்தி