கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு

மாதிரி படம்

கொரோனா பாதித்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26,725 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 292 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25, 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 73 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, தென்காசி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 26, 798 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர நேற்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 294 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்..

இந்த்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(59) இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(51) கொரோனா தொற்று ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை இவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள வரும்போது ஆறுமுகத்தின் உறவினர்கள் ஜாகிர் உசேன் உடலையும்

ஜாகிர் உசேன் உறவினர்கள் ஆறுமுகத்தை உடலையும் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அங்கு போய் முகத்தை பார்க்கும் போதுதான் உடல்கள் மாறி இருப்பது தெரிய வந்தது அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்து மீண்டும் சடலத்தை மாற்றிக்கொண்டு அடக்கம் செய்தனர்.
Published by:Sheik Hanifah
First published: