நிவர் புயல் உருவானதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புயலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 142 பேர் அரக்கோணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு கடந்த 24ம் தேதி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புயல் பாதிப்புகள் பணிகளுக்காக வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருந்து உபசரிப்பு கடலூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Also read: நீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்!
பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பேசுகையில், நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை பணிக்காக வருகை தந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை மேற்கொண்ட உங்களுக்கு நன்றி தெரிவித்து இந்த விருந்து உபசரிப்பு நடைபெறுகிறது என்றார். அதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உணவு பரிமாறுவதை அவர் தொடங்கி வைத்ததோடு அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.