• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்... கடலூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்... கடலூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

  • Share this:
கடலூரில் ஐந்து கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது வெங்காயத்தை 2 டன்னுக்கும் மேல் பதுக்கி வைத்திருந்தால் அரசு ஏழு ஆண்டு சிறை என அறிவித்த நிலையில் பதுக்கி வைத்த வெங்காயம் முழுவதும் வெளியில் சந்தைக்கு வந்துள்ளது.

நேற்றையதினம் பெங்களூர் சந்தைக்கு வரத்து வெங்காயம் வந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்காரணமாக கடலூர் வியாபாரிகள் பெங்களூரிலிருந்து குறைவான விலைக்கு பல டன் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர்  இதையடுத்து  கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் விற்கப்பட்டது.



இதனை ஏராளமான மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெங்காயத்தை ஆர்வத்துடன் வாங்கினர் மேலும் கடலூரில் வெங்காயத்தை நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று வகை வெங்காயத்தை கிலோ 20 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயத்தை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

200 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கித்தவித்த சாமானிய மக்களுக்கு தற்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்வது வரப்பிரசாதமாக உள்ளது என பெண்கள் தெரிவித்தனர் தொடர்ந்து இதே போல் வெங்காயம் விலை குறைவு குறைந்து காணப்பட்டால் அனைவரும் வெங்காயத்தை பயன்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: