ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தால் நடவடிக்கை - பாஜக நிர்வாகிகளுக்கு சிடிஆர் நிர்மல் குமார் எச்சரிக்கை

கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தால் நடவடிக்கை - பாஜக நிர்வாகிகளுக்கு சிடிஆர் நிர்மல் குமார் எச்சரிக்கை

அண்ணாமலை - சிடிஆர் நிர்மல் குமார்

அண்ணாமலை - சிடிஆர் நிர்மல் குமார்

நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜக நிர்வாகிகள் தங்களின் சொந்த கருத்துக்களை கட்சியின் கருத்து போல சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக மாநில சமூக ஊடக பிரிவு தலைவர் சிடிஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “நமது கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி குறித்து தமிழக பாஜக பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் தங்கள் சொந்த கருத்தை கட்சியின் கருத்து போல் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் மாநில தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்!” என பதிவிட்டுள்ளார்.

நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கோவையில் நிர்வாகிகளை சந்தித்த பிறகு இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Alliance, Annamalai, BJP, BJP cadre