ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல்: காவல்துறையில் சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

மாதிரிப்படம்

வடசென்னைக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபார கஞ்சா கும்பலை சென்னை போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.

 • Share this:
  சென்னையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த சென்னை காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சில மாதங்களில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கார்களில் கடத்தப்பட்டு சென்னையில் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.  தொடர் விசாரணையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு கார்களில் ஏ ஒன் உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  புதன்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து அதிவேகமாக வந்த இரண்டு கார்களை போலீசார் சந்தேகத்தின் பெயரில் நிறுத்தினர்.

  ஓட்டுநர் தாங்கள் ஆந்திர மாநிலத்தை சேர்தவர்கள் என்றும் உள்ளே இருந்த ஒருவர் தாங்கள் தமிழ்நாடு என்றும் மாற்றி பேசி வந்துள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் இரண்டு கார்களிலும் பின்புறம் ரகசிய அறை இருப்பது தெரியவந்துள்ளது.

  அதை திறந்து பார்த்த போது பச்சையான கஞ்சா செடிகள் தனிதனி பைகளில் அடைக்கப்பட்டு பக்குவமாக பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அனைத்தும் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட உயர்ரக கஞ்சா செடிகள் என்று தெரியவந்துள்ளது.

  சிக்கிய மூவரையும் திருவொற்றியூர் காவல்நிலையம் அழைத்து சென்ற தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

  சிக்கியவர்கள் அனைவரும் சென்னையில் கஞ்சா செடிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனத்தில் வந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் , ராஜேஷ் ரெட்டி, சிவபிரசாத் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவர்களிடம் இரண்டு கார்களையும் 120 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் சிக்கிய கஞ்சாவின் மதிப்பு ரூ60 லட்சம் என்று தெரிவித்தனர்.
  Published by:Karthick S
  First published: