ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- பாஜக மேலிட பொறுப்பாளர்

முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- பாஜக மேலிட பொறுப்பாளர்

சி.டி.ரவி

சி.டி.ரவி

அதிமுக-பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுகதான் தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் என பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறி வந்தனர்.

  இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தங்கள் கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகதான், முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்றார்.

  மேலும் படிக்க...தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

  அத்துடன், ஓபிஎஸ் - இபிஎஸ் தங்களுக்கு ஆதரவு தருவதால் கே.பி.முனுசாமியின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

  இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் என்ற சி.டி.ரவி கூறியதற்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  2021 சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் சட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: AIADMK Alliance, BJP, TN Assembly Election 2021