அத்திவரதரைக் காண பெருங்கூட்டம்! ”இன்று போய் நாளை வாருங்கள்”- பக்தர்களை திருப்பி அனுப்பும் போலீசார்

தெற்கு மாட வீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் ஒவ்வொருவரும் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசிக்கின்றனர்.

அத்திவரதரைக் காண பெருங்கூட்டம்! ”இன்று போய் நாளை வாருங்கள்”- பக்தர்களை திருப்பி அனுப்பும் போலீசார்
அத்திவரதர்
  • News18
  • Last Updated: July 28, 2019, 4:54 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாதசி மற்றும் விடுமுறை தினம் என்பதால், இன்று அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளதால், பக்தர்களை திரும்பிசெல்லுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் வைபவம், கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

கடந்த 27 நாட்களில், 38,55,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், நேற்று மட்டும் சுமார் 2,00,000 பக்தர்கள் அத்திவரதரைத் தரிசித்தனர்.


நேற்று இரவு 11.30 மணிவரை சாமி தரிசனம் நீண்டது. இந்த நிலையில், 28-ம் நாளான இன்று, இளநீல நிற பட்டாடை உடுத்தி, அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படும் ஏகாதசியும், விடுமுறை தினமும் ஒரே நாளில் வந்துள்ளதால், அதிகாலை முதலே எண்ணற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று வழக்கத்துக்கு மாறாக பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கூட்ட நெரிசலை தடுக்க பக்தர்களை, போலீசார் ஒலிபெருக்கி மூலம் நாளை வந்து தரிசிக்கும்மாறும் திரும்பி செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

Also Watch: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...

First published: July 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading