முழு ஊரடங்கு: பேச்சுலர்களுக்கு ஆதரவு அளித்த அம்மா உணவகம்: வழக்கத்தைவிட அதிகரித்த கூட்டம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அம்மா உணவகங்களில் காலையில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு: பேச்சுலர்களுக்கு ஆதரவு அளித்த அம்மா உணவகம்: வழக்கத்தைவிட அதிகரித்த கூட்டம்
அம்மா உணவகம்
  • Share this:
சென்னையில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் மருந்தகங்கள் தவிர ஹோட்டல்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் காலை உணவுக்காக அம்மா உணவகங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காலையிலேயே ஏராளமானோர் வரிசையில் நின்று காலை உணவை வாங்கி சென்றனர்.

வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் ரோட்டோரங்களில் டீக்கடைகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பேச்சுலர்கள் ஆகவே இருப்பதால் வீட்டில் சமைப்பதில்லை. மேலும் ஊரடங்கு போன்ற காலங்களில் அனைத்து உணவகங்களும் முடப்பட்டு இருப்பதால் தங்களுக்கு அம்மா உணவகங்கள் பெரிய அளவில் கைக்குடுக்கிறது என்கிறார் ஒருவர்.‌ அம்மா உணவகம் இருப்பதால் பட்டினியில்லாமல் இருக்கிறேன்‌. அம்மா உணவகம் எங்களுக்கு ஒரு சொந்த வீடு போல’ என்று தெரிவித்தார்.

முன்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலங்களில் தமிழக அரசு அம்மா அவர்கள் இலவசமாக உணவு வழங்கியது. ஆனால் தற்போது இருக்கக்கூடிய ஊரடங்கில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏன் இலவசமாக உணவு வழங்குவதில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள அம்மா உணவகங்களை அமைச்சர் ஜெயக்குமார் நல்ல முறையில் வைத்திருப்பது போல மற்ற மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களை ஏன் அதேபோல் பராமரிப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.


மேலும் இலவசமாக உணவுகள் வழங்கும் போது வரும் கூட்டம் மற்ற நாட்களில் வருவதில்லை என அம்மா உணவகங்களில் உணவுகளை பரிமாறுபவர் தெரிவிக்கிறார்கள். இலவசமாக வழங்கப்பட்ட போது 600 முதல் 700 இட்லிகள் விற்று வந்த நிலையில் தற்போது இலவசமாக கொடுப்பதில்லை என்பதால் ஒரு நாளைக்கு 300 இட்லிகள் விற்பனை மிகவும் சவாலாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த பேரிடர் காலத்தில் அரசிடம் உள்ள நிதி பற்றாகுறையாக இருப்பினும், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இலவசமாக உணவு அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது உள்ள சூழலில் சாலையோரம் இருப்பவர்களின் நிலை மற்றும் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில், அவர்களுக்கு மட்டுமாவது இந்த காலகட்டத்தில் அனைத்து நாட்களிலும் இலவசமாக சுகாதாரமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று அம்மா உணவகங்களில் உண்பவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading