அத்திவரதர்: இன்று மிக குறைவான கூட்டத்தால் பக்தர்கள் சீக்கிரம் தரிசித்து சென்றனர்

அத்திவரதர் உற்சவத்தின் 23-ம் நாளான இன்று கூட்டம் குறைவாக காணப்படுவதால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து செல்கின்றனர்.

அத்திவரதர்: இன்று மிக குறைவான கூட்டத்தால் பக்தர்கள் சீக்கிரம் தரிசித்து சென்றனர்
அத்திவரதர் 23-ம் நாள்
  • News18
  • Last Updated: July 23, 2019, 5:46 PM IST
  • Share this:
அத்திவரதர் உற்சவத்தின் 23-ம் நாளான இன்று கூட்டம் குறைந்து காணப்பட்டது. 

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதி அத்தி வரதர் வைபவம் 48 நாட்கள் நடை பெறுவது வழக்கம். கடந்த இருபத்தி இரண்டு தினங்களாக 28 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில், இன்று 23-ம் நாள் வைபவத்தில் காலை சுப்ரபாத சேவை உடன் அத்திவரதர் இளம் பச்சை நிறப் பட்டு உடுத்தி மகிழம்பூ மாலையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதிகாலை லேசான சாரல் மழையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அத்திரவதரை தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக, திருக்கோவிலை சுற்றி கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


முதலமைச்சர் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்பதால் பக்தர்கள் வருகை இன்று சற்று குறைவாகவே உள்ளது. காலை முதலே கிழக்கு கோபுர வாசலில் பக்தர்கள் நிற்காமல் சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். வரிசையில் கத்திருக்காமலேயே நடந்தே சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1-ம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் என லட்சக்கணக்கான பக்தர்கள்  தரிசித்து செல்கின்றனர்.

அந்தவகையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் வந்து வரதரஜார் பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்த செய்தியால் பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே தென்பட்டது.நேற்று வரை நீண்ட நேரம் இருந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் இன்று காலை முதல் கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் வரிசையில் நிற்காமல் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Also see...

First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading