புரட்டாசி மாதம் நிறைவு: கொட்டும் மழையிலும் மீன், இறைச்சி வாங்க மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்

புரட்டாசி மாதம் நிறைவடைந்தநிலையில், சென்னை சிந்தாதரிப்பேட்டை இறைச்சி மார்க்கெட் பொதுமக்கள் குவிந்தனர்.

புரட்டாசி மாதம் நிறைவு: கொட்டும் மழையிலும் மீன், இறைச்சி வாங்க மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
மீன் மார்கெட்டில் கூட்டம்
  • Share this:
புரட்டாசி மாதம் நிறைவு பெற்றத்தை தொடர்ந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க காலை முதலே மார்க்கெட்டுகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக வஞ்சிரம், வவ்வால், ஷீலா போன்ற பல்வேறு வகையான மீன்கள், இறால், நண்டு வகைகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் கொட்டும் மழையிலும் மீன் இறைச்சி வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மீன் மார்க்கெட்புரட்டாசி மாதம் நிறைவடைந்து விட்டதால் அசைவம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் பெரிய வஞ்சிரம் கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


விலை நிலவரம்( 1 கிலோ)
பெரிய வஞ்சிரம் -500சிறிய வஞ்சிரம் -400

வவ்வால் 400 -

ஷீலா -300

மட்டன் 700

சிக்கன் -220 விற்பனை செய்யப்படுகிறது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading