• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பயிர் காப்பீடு செய்வதற்கு நாளை கடைசி நாள்.. உடனே பதிவு செய்யுங்கள்...

பயிர் காப்பீடு செய்வதற்கு நாளை கடைசி நாள்.. உடனே பதிவு செய்யுங்கள்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இன்று ஞாயிற்றுகிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு ஏற்றவாறு இ-சேவை மையங்கள் இயங்கும் என வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாளாகும்.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டமானது எதிர்பாராது நிகழும் இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்க இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  சம்பா/ தாளடி/ பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. இன்று ஞாயிற்றுகிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு ஏற்றவாறு இ-சேவை மையங்கள் இயங்கும் என வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    சம்பா, தாளடி, பிசான நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் எப்போது?

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூ, திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நாளையே (நவம்பர் 15,2021)  கடைசி நாளாகும்.

    கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பியிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15, 2021 கடைசி நாளாகும்.

    காப்பீடுகளை எங்கே பதிவு செய்வது?

    தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையினால், நெற்பயில் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும்

    • வங்கிகள்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள்

    • பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம்


    காப்பீடு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும்?

    •  விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன்,

    • பதிவு விண்ணப்பம்,

    • கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை

    • வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல் (xerox)

    • ஆதார் அட்டையின் (Aadhar Card) நகல் ( xerox)

    • மேலும் பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையினை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.


    இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

    கூடுதல் விபரங்களுக்கு

    • வட்டார வேளாணமை உதவி இயக்குநரை

    • வேளாண்மை அலுவலர்

    • உதவி வேளாண்மை அலுவலர்

    • அல்லது வங்கிகளையோ அணுகலாம்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: