முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

கைது செய்யப்பட்ட கருணாஸ்

கைது செய்யப்பட்ட கருணாஸ்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அக்டோபர் 5-ம் தேதி  வரை கருணாஸை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார், ஒரு மணிநேரம் காத்திருந்த பிறகு கருணாஸை கைது செய்தனர். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்க தொண்டர்கள் அப்போது முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பின் அவரை முதலில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, கருணாஸை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியான கோபிநாத் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை விசாரணை நடத்திய நீதிபதி, கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தார். மேலும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கருணாஸை வைக்கும்மாறு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை கண்டித்து கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு முககுலத்தோ் புலிபடை மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்த 120 பேர்  சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதனைக் கட்டுபடுத்த முடியாமல் போலீசார் 120 பேரையும் கைது செய்தனர்.

"சிறைச்சாலையே எங்களுக்காகதான் கட்டப்பட்டுள்ளது": கருணாஸ்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது

First published:

Tags: Criminal case Dismissed, Criminal Court Judge Gopinath, Karunas, Oct 5, Prison, கருணாஸ்