ரேஷன் கடைகளில் பணியாளர்களை தவிர வெளிநபர்கள் இருந்தால் கைது நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

மாதிரிப்படம்

நியாயவிலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நியாய விலைக் கடைகளில் பணியாளர்களை தவிர்த்து வெளிநபர்கள் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களை தவிர்த்து, இதர வெளிநபர்கள் கடைகளில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய அறிவுறுத்தல்களை தமிழக கூட்டுறவுத்துறை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், நியாய விலைக்கடைகளில் பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து பணிபுரிவதால், அவர்கள் தொடர்புடைய வெளிநபர்கள் கடைகளில் இருந்து அங்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

  Also read: ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!

  எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாய விலைக்கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

  நியாய விலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர்த்து வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வறு வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து காவல்துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  வெளிநபர்களை கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் தெரிவக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: