ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சின்னவன் பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் மணிராஜ்,உஷா தம்பதியர். இவரது மகன் 19 வயதான கணேஷ்ராஜ் , ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை . நண்பர்கள் ,உறவினர்கள் ,அவர் எப்போது செல்லும் இடங்கள் என்று எங்கு தேடியும் கணேஷ்ராஜ் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரின் பெற்றோர்கள் ராமேஸ்வரம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேஷ்ராஜ் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
Also Read : சர்ச் பெயரில் பாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?
இந்நிலையில் கணேஷ்ராஜ் காணாமல் போன அன்று எங்கிருந்தார் என்று அவரது செல்போன் சிக்னல் டவரை வைத்து போலீசார் விசாரணை தொடங்கினர். அதில் செல்போன் சிக்னல் கடைசியாக செம்மடம் பகுதியை காட்டியுள்ளது. அத்துடன் கணேஷ்ராஜ் நண்பர்கள் சிலரது எண்ணும் கடைசியாக அதே இடத்தில் இருந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அதே பகுதியை சேர்ந்த கணேஷ்ராஜின் நண்பர்கள் மைக்கேல் அஜித் ,அஜித் குமார் , சேரன் மூன்று பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். சம்பவத்தன்று நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சகநண்பர்களே கணேஷ்ராஜை தலையில் கல்லால் அடித்து கொன்று கடற்கரை மணல் பகுதியில் புதைத்தது தெரியவந்தது.
Also Read : தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. சடலத்தை இறக்கி வைத்து மதுபோதையில் தூங்கிய கணவன்
மைக்கேல் அஜித் . அஜித் குமார் . சேரன் என்ற 3 பேர் கைது செய்த போலீசார் கொலை வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ் என்பவரை தேடிவருகின்றனர். காணமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞரை சகநண்பர்களே கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.