தாயுடன் சேர்ந்து கணவரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி..

தாய் மற்றும் 4 இளைஞர்களுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய மனைவி சிக்கியுள்ளார். முதல் கொலை முயற்சியில் தப்பித்த கணவர் இரண்டாவது முயற்சியில் சிக்கி உயிரைவிட்டது எப்படி?

தாயுடன் சேர்ந்து கணவரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி..
தாய் மற்றும் 4 இளைஞர்களுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய மனைவி சிக்கியுள்ளார். முதல் கொலை முயற்சியில் தப்பித்த கணவர் இரண்டாவது முயற்சியில் சிக்கி உயிரைவிட்டது எப்படி?
  • News18 Tamil
  • Last Updated: September 3, 2020, 10:48 PM IST
  • Share this:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்தார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியில் சென்ற ரமேஷ்பாபு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

28ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒரு இருசக்கர வாகனம் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலம் ஒன்று ஏரி கால்வாய் பகுதியில் மிதப்பதாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.


அதன்பேரில் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தது ரமேஷ் பாபு என்பது தெரியவந்தது.

உடல் முழுவதும் காயங்கள் இருந்ததும், பிரேத பரிசோதனையின் முதற் கட்ட அறிக்கையில் கொலை எனவும் தெரிய வந்தது.

இதை அடுத்து, உறவினர்களிடம் விசாரணையைத் தொடங்கியபோது, மனைவி ஜெயந்தி முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

ரமேஷ் பாபு தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று ஜெயந்தியை தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி தனது தாய் சரசா உடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கணவரை கொலை செய்துவிட்டு விபத்துபோல் சித்தரிக்குமாறு கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரால் மோதி கொலை செய்ய முயன்றனர். அதிலிருந்து லேசான காயங்களுடன் ரமேஷ்பாபு தப்பியுள்ளார்.

இதனால் அடுத்த முறை தெளிவாக திட்டமிட்டு கொலை செய்ய ஜெயந்தி அவரது தாயார் சரசா, கூலிப்படையை சேர்ந்த 4 பேர் என 6 பேரும் திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் 27ஆம் தேதி ஆலாங்குப்பம் பாலாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ்பாபுவை கூலிப்படையினர் 4 பேரும் பின் தொடர்ந்து சென்று இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ்பாபு உயிரிழந்தார்.

அவருடைய உடல் மற்றும் இரு சக்கர வாகனத்தை அதே பகுதியில் உள்ள ஏரி கால்வாய் பகுதியில் வீசிவிட்டு விபத்து நடந்தது போல் சித்தரித்துவிட்டு தங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மனைவி ஜெயந்தி, அவரது தாயார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தனுஷ், கௌதமன், ராமன், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணவரை மனைவியே தாயுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் ஆடிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading