சாதியைப் பற்றி அவதுாறாகப் பேசியதாக நெல்லை சிறுவர்கள் அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்

Youtube Video

தென்காசி மாவட்ட காவல்துறையினர் கவனத்திற்கு இந்த வீடியோ சென்றதும், அதில் உள்ள சிறுவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, அவர்களைத் துாண்டி விட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  அமைச்சர் செல்லுார் ராஜு தங்கள் ஜாதியைப் பற்றி அவதுாறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டி, நெல்லையைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை அன்று அம்மா கிளினிக் திறப்பு விழா நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அம்மா கிளினிக்கை திறந்து வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுவது குறித்து ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது பழமொழி ஒன்றைச் சொல்ல வந்தவர் உடனடியாக அதை பாதியில் நிறுத்தி விமர்சனத்தைத் தொடர்ந்தார்.

  ஆனால் அமைச்சர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.

  இந்த நிலையில் அமைச்சர் தங்களைப் பற்றி அவதுாறாகப் பேசியதாக குற்றம்சாட்டி சில சிறுவர்கள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தாங்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டே பேசியுள்ளனர். மேலும் அவர்களில் ஒரு சிறுவன் தனது கையில் கத்தியை வைத்துள்ளதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தென்காசி மாவட்ட காவல்துறையினர் கவனத்திற்கு இந்த வீடியோ சென்றதும், அதில் உள்ள சிறுவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, அவர்களைத் துாண்டி விட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Yuvaraj V
  First published: