வேலூரில் இரட்டைச் சகோதரிகள் தற்கொலை... பெற்றோர்களுக்கு மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தாய்-தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. அதுவே இரட்டை சகோதரிகளின் இந்த சோக முடிவுக்கு காரணமாக அமைந்தது.

  • Share this:
பெற்றோர்கள் அடிக்கடி சண்டைபோட்டுவந்ததால், மனமுடைந்த இரட்டையரான மகள்கள் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் வேலூர் காட்பாடியில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியம்; இவருக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர். செவ்வாய் காலை ஆன்லைன் வகுப்பிற்காக பத்மப்பிரியா, ஹரிப்பிரியா என்ற இரு மகள்களும் மாடியில் உள்ள அறைக்குச் சென்றுள்ளனர்.

வெளியே சென்று திரும்பிய தந்தை பாலசுப்ரமணியன், மகள்கள் எங்கே என மதியம் ஒரு மணி வாக்கில் மனைவி கவுரியிடம் கேட்டுள்ளார். ஆன்லைன் வகுப்பில் இருப்பதாக தாய் கூறியுள்ளார் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், மாலை 4 மணி வாக்கில் மாடிக்குப் போய் பார்த்துள்ளனர்.


அப்போது, ஒருவர் மின்விசிறியிலும், மற்றொருவர் இரும்பு கம்பியிலும் புடவையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. ச ம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் தாய்-தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதும், அதுவே இரட்டை சகோதரிகளின் இந்த சோக முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. தங்களின் பிரச்சனைகளை தனியாக விவாதித்து கொள்ள வேண்டுமே தவிர குழந்தைகளின் முன்பு சண்டையிடுவது தவறு என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்குமோ அது போல குழந்தைகளுக்கும் மன அழுத்தம் இருக்கும் அதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர்.11 ஆம் வகுப்பு படித்துவந்த இரட்டையர்கள் திடீரென தற்கொலை காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் தற்கொலை தீர்வில்லை என்பதை மாணவர்களும், இளைஞர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading