நித்யானந்தா வேரறுக்கப்படுவார்... சர்மா மனைவி திடீர் சாபம்...!

  • Share this:
நித்யானந்தா தனது மகள்களை மிரட்டி தங்கள் மீது அவதுாறு பரப்புவதாகவும், நித்யானந்தாவை தன் சத்தியத்தின் மூலம் வேரறுக்கப் போவதாகவும், நித்யானந்தா அழிந்து விடுவார் என்றும் ஜனார்த்தன சர்மாவின் மனைவி சாபம் விட்டுள்ளார். அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

நித்யானந்தா தங்களைக் கடத்தவில்லை என்றும் தாங்கள் விரும்பியே வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாகவும் சர்மாவின் மூத்த மகள் லோபாமுத்ராவும் இரண்டாவது மகள் நந்திதாவும் அடிக்கடி தங்கள் முகநுாலில் வீடியோக்கள் மூலம் தெரிவித்து வந்தனர். அதேநேரம், தங்கள் தந்தை ஜனார்த்தன சர்மா, ஆசிரமத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் தான் நித்யானந்தா மீது புகார்களைத் தெரிவித்து வருவதாகவும் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில், கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு என பல வழக்குகள் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா வெளிநாடு ஒன்றில் இருந்து கொண்டு, தினசரி யூடியூப் சேனல் மூலம் சீடர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வருகிறார்


இப்படி தினசரி நித்யானந்தா பேசும் முன்பு, அவரது சீடர்கள் அவரது புகழ் புராணத்தைப் பாடுவார்கள். பின்னர் சர்மாவின் இரண்டு மகள்களும் தங்கள் தந்தை, தாய் பற்றி கடுமையாக விமர்சனம் செய்வார்கள், அதையடுத்து நித்யானந்தாவின் உரை ஒளிபரப்பாகும்

இந்தச் சூழலி்ல்தான் தங்கள் மகள்களை வைத்தே தங்கள் குடும்பத்தை நித்யானந்தா இழிவுபடுத்தி வருவதாக ஜனார்த்தன சர்மாவின் மனைவி புவனேஸ்வரி ஆத்திரமடைந்துள்ளார். புதன்கிழமை அன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தங்கள் மகள்கள் இப்படி அவதுாறு பரப்பினால் மகள் என்றும் பாராமல் மானநஷ்ட வழக்குப் போடுவேன் என புவனேஸ்வரி எச்சரித்துள்ளார்

மேலும், நித்யானந்தா போல தானும் அவருக்கு சாபம் விடுவதாகவும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தன் சாபம் அவரைத் தாக்கும் என்றும் ஆத்திரமும் அழுகையுமாக தெரிவித்துள்ளார் அதேநேரம், ஓடி ஒளியாமல் தங்களைப் போல நேரடியாக வந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நித்யானந்தாவுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களால் ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் நித்யானந்தா. பாலியல் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் அவரது ஜாமினை ரத்து செய்துள்ளது. எங்கிருக்கிறார் என இதுவரை தெரியவில்லை. இந்தச் சூழலில் வெளியாகியுள்ள புவனேஸ்வரியின் வீடியோ நித்யானந்தா சீடர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading