• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... பெண் உட்பட 6 பேர் சிக்கினர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... பெண் உட்பட 6 பேர் சிக்கினர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அழகுநிலைய பெண் பொறுப்பாளர் உட்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் 17 வயது மாணவி. இவரது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவுக்காக 2 மாதங்களுக்கு முன் மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். தோழியின் அம்மா காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, சிறுமி அடிக்கடி அந்த அழகு நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். அந்த அழகு நிலையத்தை மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மன்ஸில் சேத்ரி (Manzil chettri) என்பவர் நடத்தி வந்தார். அதே அழகு நிலையத்தில் விக்னேஷ், சிரஞ்சீவி, ஹரீஷ் ஆகிய 3 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். அழகு நிலையத்திற்கு தோழியுடன் அடிக்கடி வந்து சென்ற மாணவியை கவனித்த மன்ஸில் அவருடன் பேசி பழக ஆரம்பித்தார். மாணவியை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு சினிமா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் அத்துமீறிப் போக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், சிறுமி பள்ளிக்கு வராமல் பல நாட்கள் ஆப்சென்ட் ஆனதாக சிறுமியின் தந்தைக்கு பள்ளி ஆசிரியர் தகவல் அளித்துள்ளார். பள்ளிக்குச் செல்லாதது குறித்து மாணவியிடம் தந்தை கடுமையாக விசாரித்த போதுதான் பெண் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அழகு நிலையத்தின் உரிமையாளரான மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், மற்றும் காரைக்குடிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்னேஷ், அறந்தாங்கியைச் சேர்ந்த 31 வயதான சிரஞ்சீவி, ஹரீஷ், அழகு நிலைய பொறுப்பாளர் மற்றும் அவரது மகளும் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியுமான சிறுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விக்னேஷ், சிரஞ்சீவி, அழகுநிலைய பொறுப்பாளர் ஆகிய மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி மன்ஸில் மற்றம் ஹரீஷை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டல், மாணவியின் தோழிக்கும் அவரது அம்மாவிற்கும் தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் பொறுப்பாளராக இருக்கும் அழகு நிலையத்தின் உரிமையாளர் என்பதால் மன்ஸிலின் அத்துமீறலை தெரிந்தே அனுமதித்திருக்கிறார் தோழியின் அம்மா

    இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. முக்கிய குற்றவாளியான மன்ஸிலை பிடித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் எனத் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: