புல்லட் ஃபரூப் கார், Z ப்ளஸ் அளவில் பாதுகாப்பு.. ரவுடி சிடி மணியின் திடுக்கிடும் வாக்குமூலம்

சிடி மணி

பிரபல ரவுடி சிடி மணி போலீசாரிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

 • Share this:
  சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி ,தென் சென்னையின் தாதாவாக வளர்ந்து தனது ரவுடி சாம்ராஜ்யத்தை தமிழகத்தின் தென்மாவட்டம் வரை விரிபடுத்தினார். நேரம் பார்த்து காத்திருந்த போலீசாருக்கு சிடி மணி கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தனது சமூக விரோத செயல்களை தொடங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

  கடந்த புதன்கிழமை ஆயுதபதுக்கல் மற்றும் தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்ற புகார்களில் சிடி மணியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது சம்பவத்தின் போது போலீசார் ஒருவரை சிடி மணி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது சிடி மணியின் வலது கை ,காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட சிடி மணியை போலீசார் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

  இதற்கிடையில் சிடி மணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல கொலை ,கொள்ளை வழக்குக்களில் தொடர்புடைய சிடி மணிக்கு எதிரிகள் அதிகம் , சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியும் நடந்தது.

  இதனால் உயிர்பயத்தில் இருந்துவந்த சிடி மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள பல கோடிகளை செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள தனது சொகுசு பங்களா முழுவதும் சிசிடிவி கேமிராவை பொறுத்தி அதை தனது மொபைல் போனுடன் இணைத்து யார் யார் தனது வீட்டை நோட்டம் விடுகிறார்கள் என்று கண்காணித்துவந்துள்ளார்.

  Also Read : ஜூடோ மாஸ்டர் கெபிராஜ், ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ் - பாலியல் வழக்குகளின் நிலை என்ன?

  அத்துடன் பல சொகுசு கார்களை வாங்கியவர் சாலையில் செல்லும் போது தனக்கு முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய கூட்டாளிகளுடன் வலம் வந்துள்ளார். இதற்கெல்லாம் உட்சபட்சமாக பத்துக்கோடி ரூபாய் செலவில் தனது சொகுசு கார் ஒன்றை புல்லட் புரூப்பாக மாற்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

  கொலை ,கொள்ளை வழக்குகள் குறைந்த வருமானம் என்பதால் தனது உல்லாச வாழ்க்கைக்கு ஏற்றவாரு சம்பாதிக்க துப்பாக்கி தயாரிப்பிலும் ஈடுப்பட்டதாக தெரிகின்றது. அதற்காக மதுரையில் ஒதுக்குப்புறமாக உள்ள பல ஏக்கர் தென்னைதோப்பை வாங்கியுள்ள சிடிமணி அங்கு மறைமுகமாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டதையும் போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் தனது தென்னை தோப்பில் தனது கூட்டாளிகளுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியும் செய்துவந்துள்ளார் சிடி மணி. சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகளை சுட்டால் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன.

  அதுகுறித்து காவல் துறையினர் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் அந்த குண்டுகளை பயன்படுத்தி வந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிடி மணியின் குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை தொடங்கியுள்ள காவல் துறையினர், அதை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  அதேபோல மதுரையில் உள்ள சிடி மணியின் கூட்டாளிகளை பிடித்த விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: