Madan OP News | ஆன்லைன் விளையாட்டில் ஆபாச பேச்சு - சிறுவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்

Youtube Video

ஆன்லைன் விளையாட்டில் சிறுவர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபடுவதாகவும், பெண்களை இழிவாக பேசுவதாகவும் யூடியூப் சேனல் மீது சென்னை சைபர்பர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் இருத்து பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் Free fire போன்ற வேறு பெயர்களில் இன்னும் அத்தகைய விளையாட்டுகள் இணையத்தில் உலாவந்து கொண்டு இருக்கின்றது. பப்ஜி விளையாட்டு எப்படி விளையாடினால் வெற்றி பெறுவது என்பது பற்றி ட்ரீக்ஸ் சொல்லி தரும் சேனலாக தொடங்கப்பட்டது தான் மதன் என்கின்ற யூடிப் சேனல்.

    பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் பப்ஜி விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டியதால் இந்த மதன் ட்ரீக்ஸ் சேனல் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ற்றது. ஆனால் போக போக ஆபாச பேச்சும் பெண்களை இழிவு படுத்தும் பேச்சுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன . ஆபாச பேச்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆபாச பேச்சுக்காகவே மதன் 18+ என்ற மற்றொரு சேனலும் தொடங்கியுள்ளனர்

    இந்த யூடியுப் சானல் நடத்தும் நபர் ஒரு கட்டத்தில் தமிழ் திரைபடங்களில் வரும் சைபர்க்ரைம் ஹீரோவாக தன்னை நினைத்துக்கொண்டு முகத்தை காட்டாமல் இருப்பது தற்பெருமை பேசுவது, எதார்த்த பேச்சு என்று பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது , போன்றவற்றை தொடங்கியுள்ளார். மதன் யூடிப் சேனலுக்கு 7 லட்சமும் இவர்களின் மற்றொரு 18+ சேனலுக்கு ஒன்பது லட்சம் பேரும் சந்தாதாரர்களாக உள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் சிறுவர்களே.

    Also Read : திருமணத்தை நிறுத்து என்னுடன் பழகு.. இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுக்கு தொல்லை

    இந்த யூடியுப் சேனல் மதன் என்ற இன்ஸ்டா பக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. மதன் இந்த ஆன்லைன் கேமில் விளையாட வருகின்றார் என்று இந்த இன்ஸ்டா பக்கத்தில் பதியப்படுகின்றது. உடனே ஏராளமான சிறுவர்கள் மதனின் ஆபாச பேச்சை கேட்க விளையாட்டில் இணைகின்றனர். சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போதே சேனல் வருமானத்தில் ஒரு குறுப்பிட்ட தொகை ஆதரவற்றவர்களுக்காக நன்கொடை செய்கிறோம் என்று சொல்லப்படுகின்றது.



    அத்துடன் உதவி செய்ய விரும்புவோர் உடனே தங்கள் கூகுல் பே அக்கோண்ட் மூலமாக பணத்தை செலுத்தலாம் என்று திரையில் பணம் செலுத்த வேண்டிய எண்ணும் காட்டப்படுகிறது பார்வையாளர்களில் பலர் பணத்தை அனுப்பி வைக்கின்றனர். யூடியுப் சேனலில் இருந்து பெறப்படும் தொகைக்கு முறையான கணக்கோ, தொண்டு நிறுவனத்திற்காக பணம் வசூல் செய்ய அங்கிகாரம் பெற்றதற்கான ஆவணம் எதும் காட்டப்படுவதில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆகையால் மதன் யூடிப் பக்கத்தின் முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டும் குறிவைத்து மூளைசலவை செய்து மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குறுப்பிட்ட யூடியுப் சேனலை நடத்தும் மதன் என்பவர் இன்ஸ்டா பக்கத்தில் பெண்களை இழிவு படுத்தி ஏன் பேசுகின்றீர்கள் என்று சிலர் கேட்டுள்ளனர்.

    Also Read : 28 மனைவிகள் முன் 37-வது திருமணம் செய்த பலே தாத்தா - வைரல் வீடியோ

    ஆனால் அவர்களையும் ஆபாசமாக பேசி மதன் யூடியுப் சேனல் அடாவடியில் இறங்கியுள்ளது. இப்படி குற்றசாட்டுகளுக்கு உள்ளான மதன் யூடிப் சேனல் மீது சென்னை க்ரைம் பிரிவு போலீசாரிடம் சில சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்பெருமை, ஆபாசம் ,பெண்களை இழிவுபடுத்துவது, ஆவணங்கள் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் இருந்து பணம் பெறுவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மதன் யூடீப் சேனல் மீது நடவடிக்கை பாயுமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
    Published by:Vijay R
    First published: