கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்: மகள், மாமியார் உதவியுடன் எரித்துக் கொலை செய்த மனைவி

  • Share this:
நாமக்கல்லில் கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை, கட்டிலோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் மனைவி. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மகள் மற்றும் மாமியார் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை ஜீவா நகரைச் சேர்ந்தவர் 45 வயதான கந்தசாமி; கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். புதன்கிழமை நள்ளிரவு 1 மணியளவில், திடீரென அவரது வீட்டு வாசலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வெளிச்சம் மற்றும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தபோது, கட்டிலில் படுத்திருந்த கந்தசாமி மிக மோசமாக தீக்காயம் அடைந்திருந்தார்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். விசாரணைக்குப் பின் கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி மற்றும் மாமியார் எல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாக்குமூலத்தில் அவர்கள் அளித்த பகீர் தகவல்கள், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன


கட்டிட மேஸ்திரியான கந்தசாமிக்கு வேலை செய்த இடத்தில் சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 7 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தக் கள்ளக்காதல் விளைவாக, தான் சம்பாதித்த பணத்தை சரோஜாவிடம் கொடுத்து வந்தார் கந்தசாமி.

கணவர், தன் கள்ளக்காதலைக் கை விடாத நிலையில் அவருக்குத் தெரியாமல் சொத்துக்களை விற்று குடும்பம் நடத்தி வந்தார் அங்கம்மாள். இதையறிந்த கந்தசாமி, தன் சொத்துக்களை விற்பது குறித்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், அங்கம்மாளை விட்டுப் பிரிய முடிவு செய்த போதுதான், கந்தசாமியைக் கொலை செய்ய அங்கம்மாள் முடிவெடுத்தார்.

முதலில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த மூவரும் பின் தீவிர விசாரணையில் ஒப்புக் கொண்டனர். கந்தசாமி மீது தீ வைத்த பிறகும் ஆத்திரம் தீராத 3 பெண்களும், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் சேர்த்து எரித்துள்ளனர். கள்ளத்தொடர்பு காரணமாக கணவரை மகள் மற்றும் தாயாருடன் சேர்ந்து மனைவியே எரித்து கொலை செய்த சம்பவம் புதன்சந்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading