• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்

ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்

Youtube Video

சென்னை அடுத்த ஆவடியில், கட்டிய கணவனே மனைவியை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு கணவனின் குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

 • Share this:
  சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் 38 வயதான கல்பனா. இவர் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் 10 வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

  கருத்துவேறுபாடு காணரமாக கணவர் மணிகண்டன் மற்றும் 2 மகள்களைப் பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார். கல்பனா, தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தபோது முகநூல் மூலமாக ஆவடி அண்ணாநகரைச்சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  பிரசன்ன வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். முகநூல் பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்பனாவை சென்னை வரவழைத்த பிரசன்ன வெங்கடேஷ் திருவேற்காடு கருமாரியம்மன்கோவிலில் வைத்து கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்.

  பின்னர் இருவரும் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். சில நாட்கள் கழித்து பிரசன்ன வெங்கடேஷ் தனது தந்தை ரங்கசாமி, தாயார் விஜயா, தங்கைபுவனேஷ்வரி ஆகியோரை அழைத்து வந்து கல்பனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

  ஒரு நாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், வேறொரு ஆண் வீட்டிற்கு வருவார் என்றும் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.

  இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவன் பிரசன்ன வெங்கடேஷும் மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.

  மறுத்தால் மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது ரகசியமாக எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது தான் கல்பனாவுக்கு அவர்கள் அனைவரும் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்வது தெரிய வந்தது.

  அதற்கு மறுப்பு தெரிவித்த கல்பனாவை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்து 5 சவரன் நகை மற்றும் சேமிப்பில் இருந்த 3 லட்சம் ரொக்கத்தை பறித்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பிய கல்பனா பிரசன்ன வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதிநேரகமாக வேலை செய்து வந்ததும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

  அத்துடன் பிரசன்ன வெங்கடேஷ் தன்னைப்போல் பலபெண்களை திருமணம்செய்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, பிரசன்ன வெங்கடேசனின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அனைவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

  ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மனைவியை, கணவனே பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: