ரூ.22 லட்சம் கடனுக்கு ரூ.16 லட்சம் வட்டி.. ஒரு கோடி ரூபாய் வீட்டையும் அபகரித்து கந்துவட்டி கும்பல் அராஜகம்

Youtube Video

22 லட்சம் கடனுக்கு 16 லட்சம் வட்டி போட்டு ஒரு கோடி ரூபாய் வீட்டை கந்துவட்டி கும்பல் ஒன்று அபகரித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் மனைவி குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்குமா?

 • Share this:
  குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான அந்தோணி சுரேஷ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரவாயல், கந்தசாமி நகருக்கு உட்பட்ட, 8 வது குறுக்கு தெரு பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

  பேக்கரி நடத்தி வரும் அந்தோணி சுரேஷ், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கந்துவட்டி சிகாமணி என்பவரிடம் சிறுக சிறுக 22 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக சிகாமணி அந்தோணி சுரேஷிடமிருந்து வீட்டின் பத்திரத்தை பெற்றுக் கொண்டு கடன் வழங்கியுள்ளார்.

  தற்போது அந்த கடன் வட்டியுடன் சேர்த்து 38 லட்சம் ரூபாய் வருவதாகவும் இதுவரை அந்த தொகையை அந்தோணி சுரேஷ் கொடுக்கவில்லை என்றும் சிகாமணி தெரிவித்துள்ளார். அதனால், சுமார் 20 பேருடன் அந்தோணி சுரேஷ் வீட்டிற்கு சென்ற கந்துவட்டி சிகாமணி, வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அடித்து வெளியே துரத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் வீட்டிற்குள்ளிலிருந்த பாத்திரம், துணி உள்ளிட்ட பொருட்களையும் வெளியே வீசிவிட்டு வீட்டை பூட்டி சென்றுவிட்டனர். ஊரடங்கு நேரத்தில் அநாதரவாக தெருவில் விடப்பட்ட அந்தோணி ராஜ் தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சாலையில் செய்வதறியாது தவித்து வருகிறார்.

  Also Read : கொரோனா பாதித்தவர் இறந்ததால் ஆத்திரத்தில் மருத்துவரை தாக்கிய உறவினர்கள்

  ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை 38 லட்சம் ரூபாய் கடனுக்காக அபகரித்து விட்டதாக அந்தோணி சுரேஷ் மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை ஏற்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய வீட்டை விற்று கடன் தொகையை தருவதாக தெரிவித்தும், அதனை ஏற்றுக் கொள்ளாத கந்துவட்டி சிகாமணி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

  வேறு வழியின்றி குடும்பத்துடன் தெருவில் நிற்கும் அந்தோணி சுரேஷ் செய்வதறியாது தவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Also Read : 20 லட்சம் பில்..16 லட்சம் கட்டியும் இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம்

  இதனிடையே, அந்தோணி சுரேஷ் இதுதொடர்பாக புகார் கொடுக்க மறுப்பதாக மதுரவாயல் போலீசார் தெரிவிக்கின்றனர்.vவழக்கை நீதிமன்றத்தில் சென்று பார்த்துக் கொள்வதாக அந்தோணி சுரேஷ் மற்றும் சிகாமணி தரப்பினர் காவல்நிலையத்தில் கூறிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் கந்துவட்டி விவகாரம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

   
  Published by:Vijay R
  First published: