முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.10 ஆயிரம் கடனுக்கு ரூ.80 ஆயிரம் - கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை

ரூ.10 ஆயிரம் கடனுக்கு ரூ.80 ஆயிரம் - கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை

மாதிரி படம்

மாதிரி படம்

தருமபுரி அருகே உள்ள பெரும்பாலையில் கந்து வட்டிக் கொடுமையால் 2 குழந்தைகளின் தாயான மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரி அருகே ரூ.10 ஆயிரம் கடனுக்காக ரூ. 80 ஆயிரம் கேட்டு கந்து வட்டிக்காரர் துன்புறுத்தியதால், மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்டார். 

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அடுத்த பூச்சூரை சேர்ந்தவர் மணி-மைதலி தம்பதி. இவர்களுக்கு மயிலேஷ் (12), மகாலட்சுமி(09)     2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவி இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வழந்து வந்துள்ளனர்.

கணவனை பிரிந்த மைதிலி, தருமபுரி நகரை ஒட்டியுள்ள பிடமனேரி ஆசிரியர் காலணியில் உள்ள தனது தாய் வீட்டில் அருகில் தனியாக வாடைகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து தருமபுரி சவுளுப்பட்டி அருகே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கும், வீட்டு தேவைகளுக்கும் கடந்த சில ஆணடுகளாக அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி, வட்டியுடன் திரும்பி செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதலியின் பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சேதத்தில் ஏற்பட்ட இழப்பிற்காக பழனியிடம் மீண்டும் ரூ.10,000 கந்து வாங்கியுள்ளார். இதனை முறையாக தவணையில் மைதிலி செலுத்தி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கந்து வட்டிக்காரர் பழனி, இன்னும் ரூ.80,000 கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கந்து வட்டி என்றார் வட்டி வட்டிக்கு என கூறி, நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மைதிலியிடம் பழனி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்பொழுது மைதிலியை தகாத வார்த்தைகளால் திட்டி பணத்தை திருப்பி தருமாறு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மைதலி, தனது தாய் வீட்டிற்கு சென்று, தாயிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மைதிலியின் தாய் இரஜேஸ்வரி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து கந்து வட்டிக்காரர் பழனியை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்து வட்டி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டதால், குழந்தைகள் ஆதரவின்றி உள்ளனர். கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see... பிம்பம்: மக்களின் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கிய கஜாவின் தொகுப்பு 

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Dharmapuri