• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி, நடிகை சாந்தினி மீது பகீர் புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி, நடிகை சாந்தினி மீது பகீர் புகார்

நடிகை சாந்தினி கொடுத்த வாட்ஸ்ஆப் ஆடியோ, வீடியோ புகைப்பட ஆதாரங்களையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

 • Share this:
  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் , தன் கணவர் மீது பொய் புகார் கூறி தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சரின் மனைவி, நடிகை மீது பகீர் புகார் அளித்துள்ளார்.

  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் செய்தியாளர்களிடமும் பரபரப்பாக பேட்டியளித்தார். தனக்கு மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

  இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

  இதனிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. ராமநாதபுரத்தில், மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருவதாக தெரிகின்றது.

  இதனிடையே, நடிகை சாந்தினி அவருக்கு கருக்கலைப்பு செய்த மருத்தவர் அருணுடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது- அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்த விவகாரத்தால் தனது வயிற்றுப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு கருப்பு அடையாளம் தெரிவதாகவும். இந்த கருப்பு அடையாளத்தால், தனது தாயார் பல்வேறு கேள்விகளை கேட்பதாகவும் சாந்தினி கூறியுள்ளார்.

  மேலும், மணிகண்டன் தனக்கு செய்த பாவத்தின் கர்மவினை தான் அவரது பதவி பறிக்கப்பட்டதற்கு காரணம் என்றும் நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார். தன்னுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் நேரடியாக புகார் அளித்திருந்தால் அவரது நிலை என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என சாந்தினி கேள்வி எழுப்பியுள்ளார்.

  தான் செய்த மிகப்பெரிய தவறு முன்னாள் அமைச்சருடன் உறவு வைத்துக் கொண்டதுதான் என்றும், நடிகை சாந்தினி அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

  இதனிடையே நடிகை சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  Also Read : அழகான பெண்கள் ஆடையின்றி கொஞ்சி வீடியோ கால் பேச ரூ.700.. சேவல் வாட்ஸ் அப் குரூப்பின் சேட்டை

  நடிகை சாந்தினி கொடுத்த வாட்ஸ்ஆப் ஆடியோ, வீடியோ புகைப்பட ஆதாரங்களையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினியை அறிமுகம் செய்து வைத்த பரணி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  இதுபோன்று உறுதியான ஆதாரங்களை அடிப்படையாக வைத்துதான் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி,தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும் , மன உளைச்சல் ஏற்படுத்தி வரும் நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இந்த புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  காவல்துறையினரின் தீவிர விசாரணையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விரைவில் பிடிபடுவார் என தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: