• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை அமைந்தகரை பெண் கொலை வழக்கில் திருப்பம்... சிசிடிவி காட்சியால் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னை அமைந்தகரை பெண் கொலை வழக்கில் திருப்பம்... சிசிடிவி காட்சியால் சிக்கிய கொள்ளையர்கள்

நகை, பணம் கொள்ளை சம்பவத்தின் போது இவர்கள், ஜெயந்தியை கொலை செய்தது தெரியவந்தது.

  • Share this:
சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த கார் ஓட்டுநர் கமலக்கண்ணன். இவரது மனைவி ஜெயந்தி(44), மகள் மோனிகா(23). இவர்கள்  இருவரும் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர் வீட்டிற்குள் புகுந்து தாய், மகள் இருவரையும்  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் விழுந்து பலியானார். மகள் மோனிகா படுகாயங்களுடன் வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாளாள் வெட்டிய இருவரை  துரத்தி சென்று பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தாம்பரத்தில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் இருவரை புளியந்தோப்பு ஷ்பெஷல் டீம் உதவி ஆய்வாளர் வானமாமலை கைது செய்தார்.

அவர்களிடம் தாம்பரத்தில் நடத்திய கொள்ளை சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இவர்கள் இருவரும் நேற்று அமைந்தகரையில் தாயையும் மகளையும் கத்தியால் கொடூரமாக தாக்கியதும், அதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானதும் அவரது மகள் மோனிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று நடந்த கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வாங்கி  குற்றவாளிகளை உறுதிப்படுத்துனர். நகை, பணம் கொள்ளை சம்பவத்தின் போது இவர்கள், ஜெயந்தியை கொலை செய்தது தெரியவந்தது.

வெள்ளை (எ) அந்தோணி மீது பெரிய மேடு காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குக்குகளும், சென்னை முழுவதும் 30 க்கும் மேற்பட்ட கொள்ளை திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொபைல் திருட்டு வழக்க்கு நிலுவையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: