• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்... அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி

சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்... அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி

சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்

சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்

சென்னையில் மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 • Share this:
  சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - காயத்ரி தம்பதி; 16 வயது அஸ்வினி, 13 வயது தரணி ஆகியோர் இவர்களின் மகள்கள். காயத்ரி, கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகள்களுடன் வந்து வசித்து வருகிறார்.

  செவ்வாய்க் கிழமை காலையில், காயத்ரி தனது இரண்டு மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் சிறுமி தரணி, வீ்ட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார்.

  பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தரணிக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அதைப் பார்த்த சிறுமியின் சகோதரி அஸ்வினி என்னவென்று கேட்க தன்னால் நிற்க முடியவில்லை என்ற கூறியபடியே தரணி மயங்கி விழுந்து விட்டார். மேலும், சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வரவே பதறிய சகோதரி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

  Also Read : கிறிஸ்துவ பள்ளி தொடங்கலாம் என கூறி நண்பர்களாக பழகியவர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி!!

  பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்றபோது, அவரது உடல் முழுவதும் நீல பாரித்து விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமி குடித்த குளிர்பானத்தின் சிறு அளவை, ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே புதன்கிழமை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறுமி குளிர்பானம் வாங்கிக் குடித்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

  காலையில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த மகள் மாலையில் உயிருடன் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை எனக் கூறி சிறுமியின் தாய் காயத்ரி கதறி அழுத காட்சிகள், காண்போரை கண்கலங்கச் செய்தது. தனது தங்கையின் உடலில் நீலம் பாரித்திருந்ததாக சிறுமி அஸ்வினி கூறியுள்ளார்.

  Also Read : இன்ஸ்டாகிராம் காதலால் வந்த வினை.. சிறுமியை நிர்வாண வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

  "மணிக் கடை" என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் அந்த மளிகைக் கடையில் எப்போதுமே தரமற்ற பொருட்களைத்தான் விற்பனை செய்து வருகின்றனர் எனவும் சிறுமி அருந்திய குளிர்பானம்கூட கடந்த ஆண்டு காலாவதியான குளிர்பானமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  இதனிடையே சிறுமியின் உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில், "மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக" சாஸ்திரிநகர் போலீசார் கூறியுள்ளனர்

  அதேநேரம், "சிறுமியின் உடலில் குளிர்பானத்தினால் விஷம் ஏறி இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுமியின் உடல் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் உடற்கூறாய்வு அறிக்கை முழுமையாக வந்த பின்பே திடீர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

  Also read : சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு என போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

  கடைகளில் எந்தப் பொருட்களை வாங்கினாலும் அவை காலாவதியானதா என்பதைப் பார்த்து உறுதி செய்த பின்பே வாங்க வேண்டும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர்பானம் குடித்த சிறுமி சிறிது நேரத்தி்ல் மயங்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: