Home /News /tamil-nadu /

'சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார்' : ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

'சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார்' : ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

தேசிய அளவில் பல்வேறு பிரபலங்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

    ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில்,
    '"என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
    80's பில்லாவும் நீங்கள் தான்
    90's பாட்ஷாவும் நீங்கள் தான்
    2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா
    ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.''
    என்று கூறியுள்ளார். இந்த பதிவுடன், ரஜினியின் டாட்டூவை தனது நெஞ்சில் குத்தியவாறு ஒரு படத்தையும் ஹர்பஜன் வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணிக்காக 1998 முதல் 2016 வரை ஒருநாள், டெஸ்ட், டி20 என பல்வேறு போட்டிகளில் ஹர்பஜன் விளையாடியுள்ளார். வலதுகை சுழற்பந்து வீச்சாளரான அவர், இந்திய அணிக்காக டெஸ்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269, டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு அளிக்கவில்லை.

    ரஜினியின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடியும் வாழ்த்து கூறியுள்ளார். மோடி தனது வாழ்த்துப் பதிவில், 'ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது தலைசிறந்த மற்றும் புதுமையான நடிப்பால் இன்னும் ஏராளமான மக்களை ரஜினிகாந்த் ஈர்க்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் ரஜினிகாந்துக்கு ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை வழங்க பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    இதேபோன்று தேசிய அளவில் பல்வேறு பிரபலங்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Harbhajan Singh, Rajini Kanth

    அடுத்த செய்தி