ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

க்ரியா பதிப்பகாசிரியர் ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் முன்னணித் தமிழ்ப் பதிப்பாளரும் க்ரியா பதிப்பதகத்தின் பதிப்பாசிரியருமான ராமகிருஷ்ணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனிற்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ‘தமிழ் பதிப்புலகத்தில் க்ரியா அகராதி பெரும் சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கு பேரிழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான ‘க்ரியா’ பதிப்பகம் ராமகிருஷ்ணன் கொரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ராமகிருஷ்ணன் வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’, தமிழ் கற்கும் அனைவருக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும். பதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர்.

  மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு தி.மு.க.வின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஈடுசெய்ய இயலாத, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: CM Edappadi Palaniswami, MKStalin