Home /News /tamil-nadu /

பதவிப் பிரமாண மை காய்வதற்குள் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்- கே.பாலகிருஷ்ணன்

பதவிப் பிரமாண மை காய்வதற்குள் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்- கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

  • 1 minute read
  • Last Updated :
    பதவிப் பிரமாண மை காய்வதற்குள் ஆட்சி ஏற்ற உடனே மோடி அரசாங்கம் வடமாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘‘ஹிந்தி மொழி பேசாத மக்களிடம் கருத்து கேட்காத வகையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கிறது. ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து பல போராட்டங்களை கண்ட தமிழகத்தில் மீண்டும் ஹிந்தி திணிப்பு போராட்டங்களுக்கு வழி வகுக்கும்.

    பதவிப் பிரமாண மை காய்வதற்குள் ஆட்சி ஏற்ற உடனே மோடி அரசாங்கம் வடமாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றனர். அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும் எனக்கூறிய மோடி, தங்களது கொள்கைகளை அம்பலப்படுத்தி வருவது என்பது கண்டிக்க வேண்டியதாக உள்ளது.

    தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த மத்திய மாநில அரசுகள் எட்டு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. அதிமுகவோ மௌனம் காக்கிறது, கூட்டணி கட்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் பாமகவே எட்டு வழிச்சாலை திட்டத்தில் இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறது

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால், அதிமுக மத்தியில் அமைச்சரவையில் இலாக பெற டெல்லியில் முகாமிட்டிருக்கிறது. காவிரியில் நீர் உரிமையை பெறுவதற்கும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சிறப்பு நிதி ஒதுக்கி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு.

    எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விசாயிகளை பாதிக்ககூடிய திட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். வருகிற 4-ம் தேதி திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்’’ என்றார் கே.பாலகிருஷ்ணன்.
    Published by:Ilavarasan M
    First published:

    Tags: CPM, K.balakrishnan

    அடுத்த செய்தி