அதிமுகவின் அதிகார பூர்வ தலைவர் மோடியும், அமித்ஷாவும் தான்: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

பதவிக்காக எதையும் செய்பவர்கள் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 13, 2019, 9:20 AM IST
அதிமுகவின் அதிகார பூர்வ தலைவர் மோடியும், அமித்ஷாவும் தான்: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!
கே.பாலகிருஷ்ணன்
news18
Updated: April 13, 2019, 9:20 AM IST
அதிமுகவுக்கு அதிகார பூர்வ தலைவர் மோடியும், அமித்ஷாவும் தான் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமாரை ஆதரித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய பாலகிருஷ்ணன், அதிமுகவுக்கு அதிகார பூர்வ தலைவர் மோடியும், அமித்ஷாவும் தான் என விமர்சித்தார்.

மேலும் பதவிக்காக எதையும் செய்பவர்கள் எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் எனவும் ராஜதந்திரத்தால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மொழியாக அங்கிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த பாலகிருஷ்ணன், திடிரென தமிழ் மீது பற்று இருப்பது போல் மோடி நடிக்கிறார் என்றும் விமர்சித்தார்.

பின்னர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன், 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் எனவும்,
தோல்வி பயத்தால் தான் எதிர்க்கட்சிகளை ரெய்டு மூலம் மிரட்டுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

உதயநிதி ஸ்டாலின் தலைவர்களை விமர்சிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, முதல்வரை அரசியல் ரீதியாக விமர்சிப்பது தவறல்ல எனவும்,கலைஞர் மீதான முதல்வரின் கருத்துக்கள் கோபபட வைக்கிறது எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...