தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதலமைச்சருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதலமைச்சருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதலமைச்சருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் தருமபுரியிலுள்ள கட்சிஅலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலமையிலான கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. தான் விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி விவசயிகளுக்கு குரல் கொடுக்காததது ஏன்?

  எட்டுவழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின்கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தவர் தற்போது தான், விவசாயி என கூறுக் கொள்கிறார். விவசாயிகள் இதை ஏற்கவில்லை. தமிழகம்முழுவதும் விவசாயிகள் அவருக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்..

  பெட்ரோல், டீசல், சயையில் எரிவாயுவு விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக கூறிவருவது உண்மைக்கு புறம்பானது.

  தமிழ்நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், இளைஞரகள் என அனைத்து தரப்பினரும் திமுக கூட்டணிக்கு வாக்ஙளிக்க தயாராக உள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியை தழுவுவத உறுதி.

  பாஜக போட்டியிடும் 20 தொகுதியிலும் டெபாசிட் இழக்கும், சிபிஎம் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது, அந்த இடங்களில் வெற்றி பெறுவது உறுதி செய்யபட்டுள்ளது. தருமபுரியில் உள்ள ஏராளமான இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்குச் வேலைக்குச் செல்வதைத் தடுக்க திட்டம் தேவை.

  Must Read : மதவெறியை, இனபிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நாம் வீழ்த்த வேண்டும்: ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தில் ஸ்டாலின்

   

  மேலும், நீராதரங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவைபடுகிறது” இவ்வாறு கே.பாலக்கிருஷ்ணன் கூறினார்.
  Published by:Suresh V
  First published: